செவ்வாய், 9 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 9 ஜூன் 2022 (12:32 IST)

பாஜகவினரால் நாட்டுக்கே பெரும் அவமானம்! – உத்தவ் தாக்கரே கருத்து!

பாஜகவினரால் நாட்டுக்கே பெரும் அவமானம்! – உத்தவ் தாக்கரே கருத்து!
நபிகள் நாயகம் குறித்து பாஜக பிரமுகர் பேசிய விவகாரம் சர்ச்சையான நிலையில் அதுகுறித்து மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே கருத்து தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் பாஜக தேசிய செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா நபிகள் நாயகம் குறித்து பேசிய சம்பவம் பெரும் சர்ச்சையானது. உலகளவில் இஸ்லாமிய நாடுகள் பலவும் இதுகுறித்து இந்தியாவிற்கு கண்டனம் தெரிவித்த நிலையில், இந்தியாவும் பதில் விளக்கம் அளித்தது.

எனினும் நுபுர் சர்மாவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் சமூக வலைதளங்களில் பலர் பேச தொடங்கியுள்ளனர். இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பேசிய மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே “பாஜக தேசிய செய்தி தொடர்பாளர் ஒருவரினால் தேசமா மொத்தமாக அவமானப்பட வேண்டியிருக்கிறது. பாஜகவினரின் ஆசைகளுக்கு எதிராக கடந்த 2.5 ஆண்டுகால ஆட்சியை நாங்கள் நிறைவு செய்துள்ளோம்.

அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ அதிகாரிகளை எங்கள் பின்னால் சுற்றவைப்பதற்கு பதிலாக, காஷ்மீர் பண்டிட்டுகள் விவகாரத்தில் கவனம் செலுத்தலாம்” என பேசியுள்ளார்.