1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 14 ஜூலை 2018 (19:30 IST)

பெண் பயணியின் கையை முறித்த ஊபர் ஓட்டுனர்: அதிர்ச்சி தகவல்

பெண் பயணி ஒருவர் ஊபர் கால்டாக்ஸியில் பயணம் செய்து கொண்டிருந்தபோது அதன் டிரைவர் திடீரென பெண் பயணியின் கையை முறுக்கி அவருடைய விரல் எலும்புகளை உடைத்த சம்பவம் அனைவரையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
 
பெங்களூரில் பெண் பயணி ஒருவர் தனது பணியை முடித்துவிட்டு வீட்டுக்கு செல்வதற்காக ஊபர் கால் டாக்சியை புக் செய்து அதில் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது ஊபரின் டிரைவர் காரை மெதுவாக ஓட்டியதால் கொஞ்சம் வேகமாக செல்லுங்கள் என்று அந்த பெண் பயணி கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் வாய்த்தகராறு மூளவே ஒரு கட்டத்தில் நீங்கள் இறங்கிக்கொள்ளுங்கள் என்று அந்த டிரைவர் கூறியுள்ளார். ஆனால் அந்த பெண் நடுவழியில் இறங்க மறுக்கவே, அவருடைய கையை பிடித்து முறுக்கியுள்ளார். இதில் அந்த பெண்ணின் விரல் எலும்புகள் முறிந்துள்ளது.
 
இதுகுறித்து அந்த பெண் பயணி கொடுத்த புகாரின் அடிப்படையில் ஊபர் கார் ஓட்டுனர் அனுஷ் என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.