செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sivalingam
Last Modified: செவ்வாய், 17 அக்டோபர் 2017 (14:53 IST)

கமல் பட பாணியில் காப்பி அடித்த கர்நாடக தேர்வர்கள் கைது

கமல்ஹாசன் நடித்த வசூல்ராஜா எம்பிபிஎஸ் படத்தில் தேர்வு எழுதும்போது இயர்போன் வழியாக விடைகளை கேட்டு தேர்வு எழுதுவது போன்ற ஒரு காட்சி இருக்கும். இதே பாணியில் கர்நாடகாவில் தேர்வு எழுதிய மூன்று தேர்வர்கள் கையும் களவுமாக பிடிபட்டு கைது செய்யப்பட்டனர்.



 
 
தேர்வு எழுதும் நபர்கள் மைக்ரோபோன் மூலம் கேள்விகளை கூற, இதனை வெளியில் இருந்து கேட்கும் நபர் அந்த கேள்விக்குரிய பதிலை கூற, அந்த பதிலை இயர்போன் வழியாக கேட்டு மூன்று பேர் தேர்வு எழுதியதாக தெரிகிறது.
 
இந்த சதித்திட்டம் குறித்த ரகசிய தகவல் ஒன்றை பெற்ற கர்நாடக போலீசார் அதிரடியாக தேர்வு மையத்தை சோதனை செய்ததில் மூன்று தேர்வர்களும் பிடிபட்டனர். அவர்கள் மூவரையும் கைது செய்த போலிசார் வெளியில் இருந்து தேர்வுக்கான விடைகளை கூறிய மர்ம நபரை தேடி வருகின்றனர். விடை கூறிய நபருக்கு தேர்வர்கள் லட்சக்கணக்கில் பணம் கொடுத்ததாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.