செவ்வாய், 3 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sivalingam
Last Modified: புதன், 8 நவம்பர் 2017 (18:44 IST)

கள்ளக்காதலனுடன் ஓடிய பெண்ணுக்கு நூதன தண்டனை கொடுத்த கணவர்

கள்ளக்காதலனுடன் வீட்டை விட்டு ஓடிய 32 வயது பெண் ஒருவருக்கு அவரது கணவரும் கணவரின் குடும்பத்தினர்களும் நூதன தண்டனை கொடுத்த வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


 


மத்தியபிரதேச மாநிலத்தை சேர்ந்த ஜாபுவா மலைவாழ் மாவட்டத்தில் உள்ள கேதி என்ற கிராமத்தில் திருமணமான 32 வயது பெண் ஒருவருக்கும் அதே கிராமத்தை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது. இந்த நிலையில் இருவரும் திடீரென ஊரைவிட்டு ஓடிவிட்டனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண்ணின் கணவர் குடும்பத்தினர் ஓடிப்போன  பெண்ணை மீண்டும் கண்டுபிடித்து ஊருக்குள் அழைத்து வந்தனர். அவருக்கு கணவரை முதுகில் 2 கிமீ தூரம் சுமக்க வேண்டும் என்ற நூதன தண்டனை அளிக்கப்பட்டது. கணவரை முதுகில் சுமந்து சென்றபோது அந்த பெண்ணை அவரது கணவரின் உறவினர்கள் ஆயுதங்களால் அடித்தனர். இதனால் ரத்த வெள்ளத்தோடு கணவரை முதுகில் இரண்டு கிமீ தூரம் தூக்கி சென்றார்.

இந்த தண்டனை குறித்த வீடியோ வைரலானதை அடுத்து அந்த பகுதி காவல்துறையினர் தாங்களாகவே வழக்குப்பதிவு செய்து அந்த பெண்ணின் கணவர் குடும்பத்தினர் 4 பேர்களை கைது செய்துள்ளனர்.