ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 23 ஜூலை 2021 (07:54 IST)

கனமழை வெள்ளம் எதிரொலி: ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால் 6000 பயணிகள் தவிப்பு!

கடந்த சில நாட்களாக ஒரு சில மாநிலங்களில் வரலாறு காணாத கனமழை பெய்து வருவதால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து ரயில்கள் ஆங்காங்கே நின்று சுமார் 6 ஆயிரம் பயணிகள் தவித்துக்கொண்டு இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது 
 
கடந்த சில நாட்களாக மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை, தெலுங்கானா மாநிலம் மற்றும் கோவா உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்த மழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது என்பதும் கார்கள் இருசக்கர வாகனங்கள் வெள்ளத்தில் மிதந்து செல்வதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன
 
இந்த நிலையில் வெள்ளம் காரணமாக பல இடங்களில் ரயில் தண்டவாளங்கள் சேதமடைந்துள்ளதால் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன. எந்தெந்த ரயில் எங்கெங்கு சென்று கொண்டிருக்கிறதோ, அங்கேயே நிறுத்தும்படியும் ரயில்வே துறை உத்தரவிட்டு இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது 
 
இதனால் பல ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன என்பதும்,  இதனால் சுமார் 6 ஆயிரம் பயணிகள் தவித்து கொண்டிருப்பதாகவும் அவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்து அவர்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு செல்ல உடனடியாக ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கைகள் அழிந்துவருகின்றன