ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 13 பிப்ரவரி 2022 (18:14 IST)

ரயில் நிலையங்களில் செயலிகள் மூலம் டிக்கெட் பெறும் வசதி அறிமுகம்!

ரயில் நிலையங்களில் செயலிகள் மூலம் டிக்கெட் பெறும் வசதி அறிமுகம்!
ரயில் நிலையங்களில் ஜிபே, போன்பே, பேடிஎம் போன்ற செயலிகள் மூலம் பணம் செலுத்தி டிக்கெட் பெறும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
 
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் மின்சார ரயில்களில் டிக்கெட் எடுப்பதில் பயணிகளுக்கு காலதாமதத்தை தவிர்க்க தானியங்கி டிக்கெட் வினியோகம் செய்யும் இயந்திரம் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ளது
 
இந்த நிலையில் பயணிகளின் கூடுதல் வசதிக்காக தானியங்கி டிக்கெட் வினியோகம் செய்யும் எந்திரத்தில் தோன்றும் க்யூ ஆர் கோடை ஸ்கேன் செய்து ஜிபே, போன்பே, பேடிஎம் போன்ற செல்போன் செயலி மூலம் பணம் செலுத்தி டிக்கெட் பெற்றுக்கொள்ள வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
 
மேலும் நடைமேடை டிக்கெட்டும் க்யூஆர் கோடு முறை மூலம் பெற்றுக்கொள்ளலாம் எனவும் இந்த க்யூஆர் கோடு வசதி மூலம் சீசன் டிக்கெட்டையும் புதுப்பித்துக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது