சென்னை புறநகர் ரயில்சேவை குறித்த முக்கிய அறிவிப்பு!
சென்னை புறநகர் ரயில் சேவை குறித்த முக்கிய அறிவிப்பை ரயில்வே துறை வெளியிட்டுள்ளது
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த சில மாதங்களாக ஊரடங்கு அமலில் இருந்ததால் புறநகர் ரயில் இயக்கம் பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டன
இந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்துவிட்டதை அடுத்து சென்னை புறநகர் ரயில் சேவை, கொரோனா காலத்திற்கு முன்பு இயக்கப்பட்ட எண்ணிக்கையில் புறநகர் ரயில்கள் மீண்டும் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது
இதன்படி சென்னை சென்ட்ரலில் இருந்து அரக்கோணம், கும்மிடிப் பூண்டி, வேளச்சேரி, செங்கல்பட்டு ஆகிய பகுதிகளுக்கும் அதேபோல் மறுமார்க்கத்திலும் அதிகப்படியான ரயில் சேவைகள் இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. இதனால் ரயில் பயணிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்