திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 30 நவம்பர் 2021 (10:07 IST)

மக்களவையில் நோட்டீஸ் கொடுத்த திமுக எம்பி டி.ஆர்.பாலு!

மக்களவையில் திமுக எம்பி டிஆர் பாலு அவர்கள் நோட்டீஸ் ஒன்றை அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது
 
தமிழ்நாட்டில் கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பு குறித்து விவாதம் செய்ய வேண்டும் என நாடாளுமன்ற திமுக எம்பிக்கள் குழு தலைவர் டிஆர் பாலு அவர்கள் மக்களவையில் நோட்டீஸ் கொடுத்துள்ளார்
 
தமிழ்நாட்டில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்பு மற்றும் நிவாரணம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என திமுக நோட்டீஸ் அளித்துள்ள நிலையில் இது குறித்து இன்று விவாதம் செய்யப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் 
 
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கனமழை பாதிப்பால் பெரும் இழப்புகள் ஏற்பட்டு உள்ள நிலையில் இது தொடர்பாக சமீபத்தில் மத்திய அரசின் குழுவினர் ஆய்வு செய்தனர்
 
இதுகுறித்த அறிக்கை தயாராகிவரும் நிலையில் இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டும் என நிவாரண உதவி குறித்தும் விவாதிக்கப்பட வேண்டும் என அதிமுக சார்பில் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது