இந்தியாவில் ரூ.4800 கோடி முதலீடு செய்யும் டொயோட்டா
இந்தியாவில் ரூ.4800 கோடி முதலீடு செய்யும் டொயோட்டா
இந்தியாவில் டொயோட்டா நிறுவனம் ரூ.4800 கோடி முதலீடு செய்ய முன்வந்து உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக பல வெளிநாட்டு நிறுவனங்கள் ஆயிரக்கணக்கான கோடிகளை முதலீடு வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம் .
அந்த நிலையில் ஜப்பான் நாட்டின் டொயோட்டா நிறுவனம் இந்தியாவில் 4 ஆயிரத்து 800 கோடி ரூபாய் முதலீடு செய்ய முன்வந்துள்ளது.
மின்சார வாகனங்களுக்கான உதிரிபாகங்களை இந்தியாவில் தயாரிக்க டொயோட்டா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்காகத்தான் நிறுவனம் 4,800 கோடி ரூபா இந்தியாவில் முதலீடு செய்ய முடிவு செய்துள்ளது.
இந்தியாவில் டொயோட்டா நிறுவனம் மின்சார வாகன உதிரிப்பாகங்கல் தயாரித்தால் மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.