1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 26 மே 2021 (08:02 IST)

இன்று முழு சந்திரகிரகணம்: இந்தியாவில் பார்க்க முடியுமா?

வானில் நிகழும் அற்புத நிகழ்வுகளில் ஒன்றான முழு சந்திர கிரகணம் இன்று நிகழ உள்ளதாக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்
 
2021 ஆம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம் இன்று மாலை 3 15 முதல் 06.22 வரை நிகழ உள்ளதாகவும் இந்த கிரகணத்தை இந்தியாவில் பார்க்க முடியாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
சூப்பர் பிளட் மூன் என்று கூறப்படும் இந்த முழு சந்திர கிரகணத்தின் போது நிலவை சுற்றி ரத்த சிவப்பு வண்ணம் காணப்படும் என்றும் இது வானில் நிகழும் அற்புத மான நிகழ்வுகளில் ஒன்று என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இந்த முழு சந்திர கிரகணத்தை கிழக்கு ஆசிய நாடுகள் ஆஸ்திரேலியா அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் பார்க்க முடியும் என்றும் இந்தியாவில் பார்க்க முடியாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பூமிக்கு மிக நெருக்கத்தில் நிலா வரும்போது வளிமண்டல ஒளிசிதறல் காரணமாக ரத்த சிவப்பு நிறத்தில் நிலவைச் சுற்றி வண்ணம் காணப்படும் என்றும் காண்பதற்கு கண்கொள்ளா காட்சியாக இருக்கும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.