திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 5 அக்டோபர் 2021 (19:41 IST)

கேரளாவில் 10 ஆயிரத்திற்கும் குறைந்த கொரோனா பாதிப்பு!

தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒன்றான கேரளாவில் கடந்த சில நாட்களாக 30 ஆயிரத்துக்கும் அதிகமான கொரோனா பாதிப்பு இருந்து வந்ததை அடுத்து இன்று 10 ஆயிரத்துக்கும் குறைவான கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது 
 
கேரளாவில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,735  என்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமானவர்களின் எண்ணிக்கை 13,878  என்றும் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 151  என்றும் கேரள மாநில அரசு தெரிவித்துள்ளது
 
மேலும் கொரோனாவால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 25,677 என்றும் இன்று பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 93,202 என்றும் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை எண்ணிக்கை 1,24,441 என்றும் கேரள மாநில அரசு அறிவித்துள்ளது