செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 31 மார்ச் 2022 (09:56 IST)

பான் – ஆதார் இணைப்பு; இன்றே கடைசி! – தவறவிட்டால் அபராதம்!

பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க இன்றே கடைசி நாள் என வருமானவரித்துறை தெரிவித்துள்ளது.

வருமானவரி கணக்கு தாக்கல் செய்வது உள்ளிட்ட சேவைகளுக்காக வருமானவரி துறையால் பான் எண் வழங்கப்படுகிறது. இந்த பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என வருமானவரித்துறை பல காலமாக கூறி வருகிறது.

இதற்கான கால அவகாசத்தை கொரோனா உள்ளிட்ட காரணங்களால் தொடர்ந்து நீட்டித்து வந்தது வருமானவரித்துறை. இந்நிலையில் இந்த இணைப்புக்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது.

இந்நிலையில் இதுகுறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ள வருமானவரித்துறை, இன்றைக்குள் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்காத கணக்குகளின் பான் எண் செயலிழந்துவிடும் என தெரிவித்துள்ளது. இதற்கு பின் பான் எண்ணை புதுப்பிக்கவும், ஆதார் எண்ணை இணைக்கவும் கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும்.

அதாவது ஏப்ரல் 1ம் தேதியிலிருந்து ஜூன் 30ம் தேதிக்குள் ஆதார் எண்ணை இணைத்தால் அபராதமாக ரூ.500 செலுத்த வேண்டி இருக்கும். இந்த காலக்கெடுவிலும் இணைக்காவிட்டால் அதன்பின் அபராதமாக ரூ.1000 செலுத்த வேண்டி இருக்கும் என கூறப்பட்டுள்ளது.