தொடர்புடைய செய்திகள்
- வாழ்க்கையே ஒரு ஸ்குவிட் கேம்தான்.. ஜாக்கிரதை! – வெப்சிரிஸை வைத்து எச்சரித்த போலீஸ்!
- 100 கோடியை நெருங்கும் தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை: இந்தியா சாதனை!
- 24.35 கோடியை தாண்டியது உலக கொரோனா பாதிப்பு!
- கர்நாடகாவில் இன்றைய கொரோனா வைரஸ் பாதிப்பு எவ்வளவு?
- கேரளாவில் 20 ஆயிரத்திற்கும் குறைந்த கொரோனா பாதிப்பு!
16 ஆயிரமாக பதிவான தினசரி பாதிப்புகள் – இந்தியாவில் கொரோனா நிலவரம்!
இந்தியாவில் கடந்த சில வாரங்களில் கொரோனா பாதிப்புகள் அதிகரிப்பதும், குறைவதுமாக தொடர்ந்து வருகிறது.
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு பின்னர் தளர்வுகள் வழங்கப்பட்டது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 50 ஆயிரத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் சமீபகாலமாக 30 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 16,862 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 3,40,37,592 ஆக உயர்ந்துள்ளது.
ஒரே நாளில் 379 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 4,51,814 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3,33,82,100 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 2,03,678 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அடுத்த கட்டுரையில்
