1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sivalingam
Last Modified: செவ்வாய், 14 மார்ச் 2017 (22:26 IST)

கையில் மண்டை ஓடுகளுடன் பிரதமர் வீடு அருகே தமிழக விவசாயிகள் போராட்டம்

தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கையில் மண்டை ஓடு மற்றும் திருவோடுகளுடன் அரை நிர்வாண போராட்டம் ஒன்றை டெல்லியில் உள்ள பிரதமர் வீடு  அமைந்துள்ள சாலையில் நடத்தினர்



 


விவசாயிகளுக்கு ரூ.5000 ஓய்வூதிய தொகை, வங்கிக்கடன்களை செலுத்த அவகாசம், காவிரி மேலாண்மை அமைப்பது, வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அய்யாக்கண்ணு தலைமையில் இந்த போராட்டம் நடந்தது. ஆண்கள், பெண்கள் என திரளாக இந்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்கும் வரை போராட்டம் தொடரும் என்றும் போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர். பிரதமர் வீடு அருகே இந்த போராட்டம் நடைபெற்று வருவதால் டெல்லியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.