1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 22 ஜனவரி 2025 (11:52 IST)

செல்போனை கொடுக்காவிட்டால் கொலை செய்வேன்.. தலைமை ஆசிரியரை மிரட்டிய பள்ளி மாணவன்..!

cellphone
கேரள மாநிலத்தில் பள்ளி மாணவர் ஒருவரின் செல்போனை தலைமை ஆசிரியர் பறித்துக் கொண்ட நிலையில், செல்போனை கொடுக்காவிட்டால் வெளியே வந்தவுடன் கொலை செய்வேன் என்று அந்த மாணவன் மிரட்டி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் பாலக்காடு பகுதியில் உள்ள பள்ளியில் படிக்கும் மாணவர்கள் செல்போனை பள்ளிக்கு கொண்டு வரக்கூடாது என்ற உத்தரவு அமலில் உள்ளது. இந்த நிலையில், பிளஸ் 1 படிக்கும் மாணவன் பள்ளிக்கு செல்போன் கொண்டு வந்த நிலையில், வகுப்பு ஆசிரியர் அதை கவனித்து அந்த மாணவனை செல்போன் கொண்டு வரக்கூடாது என்று அறிவுரை கூறியுள்ளார்.

ஆனால் அந்த மாணவன் தொடர்ந்து செல்போன் கொண்டு வந்ததை அடுத்து, மாணவன் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டு தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்கப்பட்டது. செல்போன் பறிபோனதால் ஆத்திரமடைந்த அந்த மாணவன், தலைமை ஆசிரியரிடம் சென்று, தனது செல்போனை தராவிட்டால் வெளியே வந்தவுடன் கொலை செய்திடுவேன் என்று மிரட்டி உள்ளார்.

மாணவனின் இந்த செயல்பாடு, தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அந்த மாணவனுக்கு அறிவுரை கூறியதாக தெரிகிறது. இருப்பினும், காவல்துறையில் எந்த புகார் அளிக்கப்படவில்லை என்றும், மாணவனின் பெற்றோரை பள்ளிக்கு அழைத்து, மாணவனுக்கு சரியான அறிவுரைகளை கூறும் படி அறிவுறுத்தப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

Edited by Mahendran