10 ஆண்டுகளுக்கு முன்பு ஆதார் அட்டை பெற்றவர்கள் புதுப்பிக்க வேண்டும்: மத்திய அரசு..!
10 ஆண்டுகளுக்கு முன்னர் ஆதார் அட்டை பெற்றவர்கள் தற்போது புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என மத்திய அரசு அறிகுறித்து உள்ளது. ஒவ்வொரு இந்தியருக்கும் உள்ள அடையாள அட்டையாக ஆதார் அட்டை உள்ளது என்பதும் இந்த ஆதார் அட்டை கிட்டத்தட்ட அனைத்து ஆவணங்களிலும் இணைக்கப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக வங்கி கணக்கு, பான் எண், ரேசன் அட்டை, மின் எண், வாக்காளர் அடையாள அட்டையுடன் என அனைத்து ஆவணங்களுடன் ஆதார் அட்டை இணைக்கப்பட்டுள்ளது என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் 10 ஆண்டுகளுக்கு முன்னர் ஆதார் அட்டை பெற்றவர்கள் தற்போது அந்த ஆதார் அட்டையை புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்றும் மார்ச் 15ஆம் தேதி முதல் ஜூன் 14ஆம் தேதி வரை இலவசமாக புதுப்பித்துக் கொள்ளலாம் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
மேலும் இந்த சேவையை மை ஆதார் இணையதளத்தில் மட்டுமே இலவசமாக பெற முடியும் என்றும் ஆதார் மையங்களில் நேரடியாக சென்ற புதுப்பித்தால் ரூபாய் 50 கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Edited by Siva