வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 8 மார்ச் 2024 (19:49 IST)

சாலையோரம் தொழுகை செய்து கொண்டிருந்தவர்களை காலால் எட்டி உதைத்த போலீஸார்!

delhi police
டெல்லியில் சாலையோரம் தொழுகை செய்து கொண்டிருந்தவர்களை காலால் எட்டி உதைத்த போலீஸாரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
டெல்லியில் இந்தர்லோக் பகுதியில் உள்ள ஒரு மசூதியில் கூட்டம் அதிகமாக இருந்ததது. இதனால், இஸ்லாமியர்கள் சிலர் மசூதிக்கு வெளியேயிருந்த சாலை ஓரத்தில் தொழுகை மேற்கொண்டிருந்தனர்.
 
அப்போது அங்கு 10 க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் தொழுகை செய்துகொண்டிருந்தபோது, அங்கு வந்த போலீஸ் அதிகாரி ஒருவர் தொழுகை செய்து கொண்டிருந்த இஸ்லாமியர்களை காலால் எட்டி உதைத்துத் தாக்குதல் நடத்தினார்.இதுகுறித்து அங்கிருந்தவர்கள் போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

அவர்கள் மீது போலீஸார் தாக்குதல் நடத்தியதாக தெரிகிறது.  இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

போலீஸாரின் இந்தச் செயல் பற்றிப் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.