காங்கிரஸை இப்படி பார்க்க முடியல... கபில் சிபல் வேதனை
காங்கிரஸ் கட்சியை தற்போது இருக்கும் நிலையில் பார்க்க விரும்பவில்லை என்று கபில் சிபல் பேட்டியளித்துள்ளார்.
இது குறித்து மேலும் அவர் கூறியதாவது, காங்கிரஸ் கட்சிக்கு உட்கட்சி தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் தேவை. காங்கிரஸ் கட்சியை தற்போது இருக்கும் நிலையில் பார்க்க விரும்பவில்லை. நாட்டின் தற்போதைய நிலையில் காங்கிரஸ் கட்சி இந்த நிலையில் இருப்பது தான் வருத்தம் தருகிறது.
காங்கிரஸ் கட்சிக்கு தலைவரே இல்லை. யார் முடிவுகளை எடுக்கிறார் எனத் தெரியவில்லை. எல்லை மாநிலமான பஞ்சாப் விவகாரத்தில் காங்கிரஸ் எடுத்திருக்கும் முடிவா பாகிஸ்தானுக்கும் ஐஎஸ்ஐ அமைப்புக்கும் சாதகமாக அமைந்திருக்கிறது.
காங்கிரஸ் கட்சி ஒற்றுமையாக இருக்கிறது என்பதை உறுதி செய்ய வேண்டிய தருணம் இது. காங்கிரஸ் கட்சியில் செய்ய வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்து மூத்த தலைவர்கள் சோனியா காந்திக்கு எழுதிய கடிதம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட காத்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.