1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 14 டிசம்பர் 2021 (22:24 IST)

மஹாராஷ்டிராவில் மேலும் 8 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி

கடந்த ஆண்டு சீனாவில் இருந்து இந்தியா உள்ளிட்ட பல்வேறு லிலி நாடுகள்:இல் கொரொனா தொற்றுப் பரவியது. தற்போது கொரொனா இரண்டாவது அலை பரவி வரும் நிலையில் தென்னாப்பிரிக்காவில் இருந்து ஒமிக்ரான் வைரஸ் உலகம் முழுவதும்  பரவி வருகிறது. இதுகுறித்து உலக சுகாதார நிறுவனம்  எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில், கொரொனா பரவலை தடுக்க மத்திய அரசு மாநில அரசுகளுடன் இணைந்து கொரொனா இலவச தடுப்பூசி , விழிப்புணர்வு உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், வெளிநாடுகளில் இருந்து மஹாராஷ்டிர மாநிலத்துக்கு வந்த  8 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை மஹாராஷ்டிராவில் 28பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒமிக்ரான் தொற்று பரவிவருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், இங்கிலாந்தில் ஒமிக்ரான் தொற்றால் ஒருவர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.