திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sivalingam
Last Modified: வெள்ளி, 4 ஆகஸ்ட் 2017 (08:20 IST)

சச்சின் தெண்டுல்கரின் மோசமான ஸ்கோர்

கிரிக்கெட் உலகின் கடவுள் என்று புகழப்படும் சச்சின் தெண்டுல்கர் ரன்கள் எடுப்பதில் சாதனை படைத்திருந்தாலும் ஒரு எம்பியாக மோசமான ஸ்கோரை பெற்றுள்ளார். ஆம் மாநிலங்களவை உறுப்பினராக இருக்கும் சச்சின் தெண்டுல்கர் கடந்த 5 ஆண்டுகளில் இதுவரை வெறும் 23 முறை மட்டுமே பாராளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளார்.



 
 
இதுவரை அவருக்கு சுமார் ரூ.60 லட்சம் வரை செலவு செய்திருப்பதாக செய்திகள் வெளியான நிலையில் அவர் வாங்கும் சம்பளத்திற்கு சேவை செய்யவில்லை என்றே குற்றம் சாட்டப்படுகிறது.
 
விளையாட்டு வீரர்களுக்கு தரும் கெளரவ பதவி போன்றது இல்லை இந்த எம்பி பதவி. மக்களுக்கு சேவை செய்யவே கொடுத்தது. அவரால் இந்த பணியை செய்ய முடியாவிட்டால் ராஜினாமா செய்துவிடலாமே என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.