புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vm
Last Updated : வெள்ளி, 18 ஜனவரி 2019 (18:13 IST)

வைகை புயலுக்கு நேர்ந்த சோகம்

வைகைப்புயல் வடிவேலு ஒரு காலத்தில் மூன்று ஷிப்ட் வேலை செய்து நடித்து கொடுத்தார். திமுக-வுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டதால் 2011ஆம் ஆண்டு சினிமாவில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக ஓரம்கட்டப்பட்ட வடிவேலு, ஒரு கட்டத்தில் எந்த பட வாய்ப்புகளும் இல்லாமல் இருந்தார். 

அதன்பிறகு சில படங்களில் நடித்த வடிவேலு , சில வருடங்களாக வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார். தற்போது எந்த படத்திலும் அவர் நடிக்காததால் அடிக்கடி மதுரைக்கும் சென்னைக்கும் இடையே பறந்து கொண்டிருந்தார். இப்போது அவர் மதுரையிலேயே தங்கி விட்டதாக கூறப்படுகிறது. வைகைப்புயல் வடிவேலு மீண்டும் கேமரா முன்பு நிற்க வேண்டும் என்பதே பலருடைய விருப்பமாக உள்ளது.