திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 11 அக்டோபர் 2024 (13:57 IST)

மாணவனை மசாஜ் செய்ய வைத்த ஆசிரியை! - வைரலான வீடியோவை தொடர்ந்து அதிரடி நடவடிக்கை!

School

பள்ளியில் பாடம் நடத்தாமல் மாணவனை மசாஜ் செய்ய சொன்ன பெண் ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் ராஜஸ்தானில் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் பள்ளிகள் பல மாணவர்களுக்கு கல்வி போதிக்கும் நோக்கில் செயல்பட்டு வருகின்றன. ஆனால் பள்ளி ஆசிரியர்கள் சிலர் மாணவர்களை தங்கள் சொந்த வேலைகளுக்கு எடுப்பு ஆட்கள் போல பயன்படுத்துவதால் ஆசிரியர்கள் குறித்த தவறான அபிப்ராயம் சமூகத்தில் நிலவ காரணமாக அமைந்து விடுகிறது.

 

அப்படியான ஒரு சம்பவம் ராஜஸ்தானில் நடந்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகே உள்ள கர்தார்புராவில் உள்ள பள்ளி ஒன்றில் ரேகா சோனி என்ற பெண் ஆசிரியையாக பணிபுரிந்து வந்துள்ளார். 3ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆசிரியையாக இருந்த ரேகா சோனி, மாணவர்களுக்கு பாடம் நடத்தாமல், அவரது கால்களுக்கு மசாஜ் செய்து விட சொல்லி மாணவன் ஒருவனுக்கு உத்தரவிட்டுள்ளார்.
 

 

மாணவன் ஒருவன் ஆசிரியைக்கு மசாஜ் செய்துவிடுவதும் மற்ற மாணவர்கள் அமர்ந்திருப்பதும் வீடியோவாக வெளியாகி சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து உடனடி விசாரணை நடத்திய ராஜஸ்தான் கல்வி அதிகாரிகள், ஆசிரியை ரேகா சோனியை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளனர். படிக்க பள்ளி சென்ற மாணவர்களை மசாஜ் செய்வதற்கு ஆசிரியை பயன்படுத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K