1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 23 ஜனவரி 2018 (11:37 IST)

ராஜீவ்காந்தி கொலை வழக்கு ; மத்திய அரசுக்கு 3 மாதம் கெடு - உச்ச நீதிமன்றம் அதிரடி

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு பல வருடங்களாக சிறையில் இருக்கும் 7 பேரை விடுதலை செய்வது பற்றி இன்னும் மூன்று மாதத்திற்குள் தங்கள் முடிவை மத்திய அரசு தெரிவிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் கெடு விதித்துள்ளது.

 
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் 25 வருடங்களுக்கும் மேல் சிறையில் உள்ளனர். அந்நிலையில், கடந்த 2016ம் வருடம் மார்ச் மாதம், முன்னாள் மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களை விடுதலை செய்ய சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றினார். ஆனால், அவர்களை விடுதலை செய்யும் அதிகாரம் மத்திய அரசிற்கே இருப்பதாக கூறி, உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வழக்கு தொடர்ந்தது. அதனால், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.
 
இந்நிலையில், இது தொடர்பான வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த விவகாரத்தில் இன்னும் 3 மாதத்திற்குள் தங்கள் முடிவை தெரிவிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கெடு விதித்தது.
 
எனவே அவர்கள் 7 பேரையும் விடுதலை செய்வது குறித்து 3 மாதத்தில் முடிவெடுத்து மத்திய அரசு தெரிவிக்கும் எனத் தெரிகிறது.