செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj kiyan
Last Updated : சனி, 4 ஜனவரி 2020 (18:42 IST)

போராட்டக் காரர்களின் காலில் விழுந்த காவல் அதிகாரி!

ஆந்திர மாநிலத்தில் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது. இங்கு  முதலமைச்சர்  3 தலைநகர் கட்டும் திட்டத்தை அறிவித்துள்ள நிலையில் அவரது அறிவிப்பு எதிர்ப்புகள் வலுத்து வருகிறது.
இந்நிலையில், அம்மாநிலத்தில் உள்ள விவசாயிகள் 3 தலைநகர் கட்டும் திட்டத்தால் அமராவதியின் முக்கியத்துவம் குறைந்துவிடும் என  மண்டபம் என்ற இடத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
 
அப்போது, அங்கு வந்த காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் வீராரெட்டியின் காலில் விவசாயிகள் விழுந்தனர். ஆனாலும் கலைந்து செல்லாமல் இருக்கவே பதிலுக்கு காவல் அதிகாரியும் அவர்களீன் காலி விழுந்து அவர்களை அமைதி வழிக்கு கொண்டு வந்தார்.