வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj

காதலை ஏற்க மறுத்த பெண்ணை எரித்துக் கொன்ற நபர் !

ஆந்திர மாநிலத்தில் காதலை ஏற்காத பெணை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்திலுள்ள சித்தன்ன பேட்டையில் வசித்து வந்தவர் ஒரு இளம்பெண். இவர் விஜயவாடாவில் உள்ள கொரோனா மையத்தில் வேலை செய்து வந்தார்.

இந்நிலையில் இளம்பெண்ணை நாகபூஷணம் என்பவர் ஒருதலையாகக் காதலித்து வந்துள்ளார். அத்துடன் அவருக்குத் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

இதனால் அப்பெண் போலீஸில் புகார் அளித்தார். ஒருமுறை போலீஸார் நாகபூசனை எச்சரித்து அனுப்பினர்.  ஆனாலும் அடங்காத இளைஞர் தொடர்ந்து இளம்பெண் பணிபுரியும் இடத்திற்கு வேலைக்குச் சென்று அவரிடம் தகராறு செய்து தன்னை காதலிக்கும்படி கூறியுள்ளார்.

இதனைத்தொடர்ந்து  இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது.பின்னர் தான் வைத்திருந்த பெட்ரோலை எடுத்து பெண்ணின் மீது ஊற்றி தி வைத்த்துவிட்டு ஓடிப் போனார் நாகபூசன். பின்னர் அவரை மீட்டு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில பெண் உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.