செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 9 ஜனவரி 2018 (17:56 IST)

ஓல்ட் மங்க் ரம்மை அறிமுகப்படுத்திய கபில் மோகன் மரணம்

ஓல்ட் மங்க ரம் நிறுவனத்தின் தலைவர் கபில் மோகன் மாரடைப்பால் காலமானார்.

 
பிபரலமான மதுபானங்களில் ஒன்றான ஓல்ட் மங்க் ரம் இந்தியாவில் 1954ஆம் ஆண்டு கபில் மோகன் என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் ஓல்ட் மங்க் பிரபலமடைந்தது. ரம் என்றாலே அனைவருக்கும் நினைவில் வருவது ஓல்ட் மங்க் என்ற பெயர்தான்.

 
கபில் மோகன் கடந்த சனிக்கிழமை தனது 88 வயதில் மாரடைப்பால் மரணமடைந்தார் என்று சமூக வலைதளம் வாயிலாக செய்திகள் வெளிவந்துள்ளது.