2 ஜி வழக்கைப் போல் தம்மை விடுவிக்கும் வகையில் தீர்ப்பு இருக்கும்; லாலு பிரசாத்
கால்நடைத் தீவன ஊழலில் ஈடுபட்டதாக லாலு பிரசாத் மீது குற்றம் சாட்டப்பட்டது. அந்த வழக்கின் தீர்ப்பு இன்று 3 மணியளவில் வெளியாகவுள்ளது.
லாலு பிரசாத் பீகார் முதல் அமைச்சராக இருந்த போது(1991 முதல் 1995 வரை) கால்நடைத் தீவனம் வாங்கியதில், அரசு கருவூலத்தில் இருந்து 39 கோடி ரூபாய் முறைகேடு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது. தீர்ப்பு அன்று ஆஜராகும்படி ராஞ்சியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டதால், தமது மகன் தேஜஸ்வியுடன் லாலுபிரசாத் ராஞ்சியில் உள்ள நீதிமன்றத்திற்கு வந்துள்ளார். தீர்ப்பு பாதகமாகிவிட்டால் இருவரும் கைது செய்யப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இதனிடையே செய்தியாளர்களை சந்தித்த லாலுபிரசாத், 2 ஜி வழக்கு, ஆதர்ஷ் வழக்கு போன்றவற்றில் நியாயமான தீர்ப்புகள் கிடைத்திருப்பதைப் போல, தம்மை விடுவிக்கும் வகையில் தீர்ப்பு இருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.