வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: திங்கள், 28 நவம்பர் 2022 (21:06 IST)

3 மாதக் குழந்தையை தரையில் அடித்துக் கொன்ற தந்தை!

மனைவின் நடத்தையின் சந்தேகம் எழுந்ததால், பெற்ற குழந்தையின் காலைப் பிடித்து தரையில் அடித்துக் கொன்ற தந்தையை போலீஸார் கைது செய்துள்ளனர்.

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாளஹஸ்தி சுகபிரம்பா ஆசிரம் அருகில், வாட்டர் ஹவுஸ் காலனியில் வசித்து வருபவர் முனி ராஜா.

இவர் தன் மனைவி சுவாதி  மற்றும் 3 மாத ஆண்குழந்தை  நிகிலுடன் வசித்து வந்தார்.
நான்கு  நாட்களுக்கு முன் குழந்தைக்கு நோய் வாய்ப்பட்ட நிலையில், நிகிலை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும்படி சுவாதியிடம் முனிராஜ் கூறியுள்ளார்.

பின்னர், முனிராஜுக்கும், சுவாதிக்கும் இடையே  சண்டை வந்ததுள்ளது,. அப்போது, ஆத்திரத்தில், முனிராஜ், நிகிலை தூக்கி தரையில் அடித்துள்ளார்.

இதில், நிகில் ராஜ் பலத்தை காயம் அடைந்தார், அவரை அருகில் வசிப்போர்  மருடத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாகக் கூறியுள்ளார்.

இதுகுறித்து, போலீஸார் வழக்குப் பதிவு சசெய்து வருகின்றனர்.

Edited by Sinoj