1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 9 செப்டம்பர் 2019 (17:00 IST)

pubg விளையாட்டுக்காக தந்தையை கொன்ற மகன் ...

இன்றைய குழந்தைகள் மற்றும், இளைஞர்களின் முக்கிய பொழுதுபோக்கு விளையாட்டாக பப்ஜி கேம் மாறியுள்ளது. சில மாணவர்கள் இந்த விளையாட்டிற்கு அடிமையாகி உள்ளதுதான் கவலையளிக்கும் செய்தியாக உள்ளது. இந்த நிலையில் கர்நாடக மாநிலம் பெல்காமில், பப்ஜி கேம் விளையாட அனுமதிக்காத தந்தையை, மகன் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் பெல்காமில்  உள்ள சித்தேஷ்வர் என்ற ஊரில் வசித்து வந்தவர் ஷங்கர். இவர் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி.  இவரது மகன் ரகுவிர் கும்பர். 
 
ரன்வீருக்கு பப்ஜி கேம் விளையாட்டில் அதிக ஆர்வம் இருந்துள்ளது. அதனால், பப்ஜி விளையாட்டு இல்லாமல் இருக்க முடியாது என்ற நிலைமைக்கு அவர் அதற்கு அடிமையாகியுள்ளதாகத் தெரிகிறது,
 
இந்த நிலையில், பப்ஜி கேம் விளையாடக் கூடது என்பதற்காக ஷங்கர், மகன் செல்போனில் விளையாடுவதைத் தடுத்துள்ளார். ஆனாலும், தொடர்ந்து பப்ஜி கேம், விளையாடியுள்ளார் ரகுவீர். இதைத் தடுக்கவேண்டி, கோபம் கொண்ட ஷங்கர், செல்போனில் இணையத் தொடர்பை துண்டித்துள்ளார்.
 
இதனால் கோபம் அடைந்த ரகுவீர், வீட்டில் உள்ள குடும்பத்தினரைஒரு அறையில் வைத்து பூட்டி, தன் தந்தையை பலமாக அடித்து, உதைத்து, கண்டந்துண்டமாக வெட்டிக் கொலை செய்துள்ளார்.
 
இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, குற்றவாளியான ரகுவீரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.