புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 13 மே 2019 (21:54 IST)

சந்திரபாபு நாயுடு-சந்திரசேகரராவ் போட்டியால் வரும் குழப்பம்!

மக்களவை தேர்தல் கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் இருப்பதால் அரசியல் கட்சி தலைவர்கள் தேர்தல் முடிவை நோக்கி எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இதில் காங்கிரஸ், பாஜக ஆகிய இரண்டு தேசிய கட்சிகளும், முடிவை பார்த்த பின்னர்தான் அடுத்தகட்ட நடவடிக்கை என அமைதியாக உள்ளது. மே 21ஆம் தேதி ராகுல்காந்தி அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டினாலும், அதில் எத்தனை கட்சிகள் கலந்து கொள்ளும் என்பது ஒரு கேள்விக்குறியே
 
அதேபோல் மம்தா பானர்ஜி, மாயாவதி, நிதிஷ்குமார், மு.க.,ஸ்டாலின் உள்ளிட்ட மாநில கட்சி தலைவர்களும் இப்போதைக்கு காங்கிரஸ் கூட்டணியா, மூன்றாவது அணியா? என மனதிற்குள் குழப்பத்தில் இருந்தாலும் அதனை வெளியே காட்டிக்கொள்ளாமல் முடிவு வரும் வரை பொறுமையை கடைபிடிக்க முடிவு செய்துள்ளனர்.
 
ஆனால் சந்திரசேகரராவ், சந்திரபாபு நாயுடு ஆகிய இருவர் மட்டுமே இப்போதே நடவடிக்கையை தொடங்கியுள்ளனர். ஒருபக்கம் ராகுல்காந்தியை சந்திரபாபு நாயுடு போய் பார்க்க, இன்னொரு பக்கம் பினராயின் விஜயனை சந்திரசேகரராவ் போய் பார்க்கின்றார்.

உண்மையில் இவர்கள் இருவரும் மத்தியில் ஆட்சி அமைக்க  முயற்சிக்கின்றார்களா? அல்லது தங்களுக்குள் இருக்கும் ஈகோவை வெளிப்படுத்த நினைக்கின்றார்களா? என்ற குழப்பம்தான் நடுநிலையாளர்களிடம் ஏற்பட்டுள்ளது