1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Updated : வெள்ளி, 25 அக்டோபர் 2019 (16:28 IST)

தீபாவளி வின்னர் "கைதி " கதிகலங்கும் பிகில்?

இன்று வெளியாகியுள்ள கைதி மற்றும் பிகில் படத்தில் பிகுலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. காரணம் விஜய் உச்ச நடிகர் என்பதால் தான். ஆனால் இந்த இரண்டு படத்தையும் பார்த்த ஆடியன்ஸ் கைதி படத்தின் கதை சிறப்பாக உள்ளது. சுவாரஸ்ய திருப்பங்களுடன் கனகராஜின் மீண்டும் ஒரு அற்புத படமென்பதை கைதி நிருபித்துள்ளது.


 
இதனால் ட்விட்டரில் ஒரு பெரிய வாக்குவாதமே  நடைபெற்று வருகிறது. தைரியமாக பிகில் உடன் மோதிய கைதி தனித்து நின்று தனது தனித்துவத்தை காட்டியுள்ளது என குறிப்புட்டு ஆளாளுக்கு பேசி வருகின்றனர். இந்நிலையில் ட்விட்டரில் யோகி பாபுவின் காமெடி ஒன்றை வைத்து தீபாவளி வின்னர் கைதி கவலையில் தளபதி பேன்ஸ் என குறிப்பிட்டு ட்ரோல் செய்துள்ளனர். 
 
மேலும் விஜய் ரசிகர்களுக்கு பிகில் தீபாவளியாக இருந்தாலும் ஓவரால் மக்களின் கருத்துக்களை வைத்து பார்க்கையில் பிகிலை பீட் செய்து கைதி கள்ளா கட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.