செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 29 டிசம்பர் 2022 (14:58 IST)

’நீயா நானா பாத்திடுவோம்’; நடுவானில் விமானத்தில் சண்டை! – வைரலாகும் வீடியோ!

Flight Fight
இந்தியாவிலிருந்து பாங்காக் சென்ற விமானத்தில் இந்தியர்கள் சிலர் சண்டை போட்டுக் கொண்ட வீடியோ வைரலாகியுள்ளது.

வாக்குவாதங்களும், சண்டைகளும் மக்கள் எங்கெல்லாம் இருக்கிறார்களோ அங்கெல்லாம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. சின்ன சின்ன விஷயங்களுக்கும் கூட ஏற்படும் வாக்குவாதம் பெரும் சண்டையாக மாறிவிடுவது உண்டு. அப்படியாக விமானத்தில் நடந்த ஒரு கை கலப்பு சண்டைதான் தற்போது வைரலாகியுள்ளது.

இந்தியாவிலிருந்து ஹாங்காங் சென்ற ‘தாய் ஸ்மைல் ஏர்லைன்ஸ்’ விமானத்தில் ஏராளமான பயணிகள் பயணித்துள்ளனர். அதில் சில இந்தியர்களும் பயணித்துள்ளனர். அவர்களில் சிலருக்கு இடையே இருக்கை தொடர்பாக ஏதோ வாக்குவாதம் எழுந்துள்ளது. இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து ஆக்ரோஷமாக திட்டத் தொடங்கவே விமான பணிபெண் அவர்களை சமாதானம் செய்ய முயல்கிறார்.

ஆனால் ஆத்திரமடைந்த நபர் மற்றொரு நபரை கண்மூடித்தனமாக தாக்குகிறார். இவை யாவும் விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது நடந்துள்ளது. இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், இந்த விவகாரம் குறித்து வருத்தம் தெரிவித்துள்ள தாய் ஸ்மைல் நிறுவனம், பயணிகளுக்கு தேவையான உதவியும், வழிகாட்டுதல்களும் வழங்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.

Edit By Prasanth.K