செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 27 ஆகஸ்ட் 2019 (13:27 IST)

வெங்கடாசலபதிக்கு பயங்கரவாதிகள் அச்சுறுத்தலா?: திருப்பதிக்கு ரெட் அலர்ட்

பயங்கரவாதிகளின் அச்சுறுத்தலை தொடர்ந்து திருப்பதியில் ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 22 ஆம் தேதி, கோவையில் பாகிஸ்தானைச் சேந்த பயங்கரவாதிகள் ஊடுறுவியுள்ளதாக மத்திய உளவுத்துறை அறிவித்திருந்தது. இதனையடுத்து தமிழகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவில், சித்தூர் ஆகிய பகுதிகளுக்கு பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் உள்ளதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் காணிப்பாகம் விநாயகர் கோவிலுக்கும், திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. திருப்பதி கோவிலுக்கு செல்லும் வாகனங்கள் அனைத்தும் முழுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுகின்றன. மேலும் திருப்பதி கோவிலை சுற்றிலும் துப்பாக்கி ஏந்திய போலீஸார் தீவிர கண்கானித்து வருகின்றனர்.

தமிழகத்தில் இருந்து ஆந்திராவுக்குள் செல்லும் வாகனங்கள் அனைத்தும் போலீஸாரால் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகே அனுமதிக்கப்படுகின்றன.