டெலிபோன் ஒட்டுகேட்பு விவகாரம்: எஸ்ஸார் குழுமம் மீது உடனடி விசாரணை - மோடி உத்தரவு
டெலிபோன் ஒட்டுகேட்பு விவகாரம்: எஸ்ஸார் குழுமம் மீது உடனடி விசாரணை
விவிஐபிக்கள் உள்ளிட்டோரின் டெலிபோன் உரையால்களை ஒட்டுக்கேட்ட விவகாரத்தில், எஸ்ஸார் குழுமம் மீது உடனடி விசாரணைக்கு பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார்.
இந்தியாவில் உள்ள விவிஐபிக்கள் உள்ளிட்டோரின் டெலிபோன் உரையால்களை, முன்னணி நிறுவனமான எஸ்ஸார் குழுமம் ஒட்டுக்கேட்டதாக புகார் எழுந்தது.
இது குறித்து, விசாரணைக்கு பிரதமர் அலுவலகம் உத்தரவிட்டது. அதில், 29 பக்க விசாரணை அறிக்கையை சுரேன் உபால் பிரதமர் அலுவலகத்தில் கடந்த ஜுன் 1ம் தேதி தாக்கல் செய்தார். அதில், எஸ்ஸார் குழுமம் மீதான புகார் உண்மை என ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டது. இதனையடுத்து, எஸ்ஸார் குழுமம் மீது உடனடி விசாரணைக்கு பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார்.