குடித்து விட்டு சலம்பல் செய்த ஆசாமி; பொக்லைனால் மோதிய டிரைவர்! வீடியோ வைரலானதால் நடவடிக்கை!

புதன், 8 ஜூலை 2020 (13:50 IST)
தெலுங்கானாவில் மது அருந்திய ஆசாமி ஒருவரை டிரைவர் ஒருவர் பொக்லைன் எந்திரத்தால் மோதி தள்ளிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலத்தின் முலுகு பகுதியில் ஒருவர் பொக்லைன் எந்திரம் மூலம் தோண்டும் பணிகளை மேற்கொண்டு வந்துள்ளார். அப்போது அந்த பகுதிக்கு மது அருந்தி விட்டு வந்த நபர் ஒருவருக்கும் பொக்லைன் டிரைவருக்கும் வாக்குவாதம் எழுந்துள்ளது. அதோடு மட்டுமல்லாமல் பணி செய்யும் இடத்தில் சென்று அமர்ந்து கொண்டு இடையூறு செய்துள்ளார் எனவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த டிரைவர் பொக்லைனால் தோண்டும் முன்பகுதியை கொண்டு போதை ஆசாமியை இடித்து தள்ளியுள்ளார்.

இந்த சம்பவத்தை படம் பிடித்த சிலர் சமூக வலைதளங்களில் அதை பகிரவும், இதுகுறித்து தாக்க்ய டிரைவர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். விசாரணையில் ஆசாமி மது அருந்தி விட்டு இடையூறு செய்தததாக டிரைவர் கூறியுள்ளார்.

எல்லாம் காட்டு

நெதன்யாகு நியூயார்க் வரும்போது கைது செய்வேன்!.. நகர மேயர் காட்டம்!..

பள்ளி, மருத்துவமனைகளில் ஜங்க் புட் விற்பனைக்கு தடை!.. கர்நாடக அரசு அதிரடி...

விட்டாச்சு லீவு!.. FIFA உலக கோப்பை இறுதி போட்டிக்கு விடுமுறை அறிவித்த கேரளா!..

நீங்கள் வேலையில் இருந்து நீக்கப்பட்டீர்கள்.. விடுமுறைக்கு சென்ற ஊழியருக்கு வந்த இமெயில்..

நள்ளிரவில் ஆடையின்றி தெருவில் ஓடிய இளம்பெண்.. அதன்பின் நடந்த விபரீதம்...

அடுத்த கட்டுரையில்
Show comments