புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 25 ஜூலை 2019 (16:43 IST)

போதை ஊசி போட்டு இளம்பெண் கற்பழிப்பு - அதிரவைக்கும் சம்பவம்

சத்தீஸ்கர் மாநிலம் பிலாஷ்பூர் என்ற பகுதியைச் சேர்ந்தவர் இளம்பெண் (19)ஒருவர் சில நாட்களுக்கு முன்னர் காணமல் போனார்.பின்னர் இளம்பெண்ணின் பெற்றோர் போலீஸிடம் புகார் தெரிவித்தனர்.
இதுகுறித்து வழகுபொ பதவு செய்து காணாமல் போன பெண்ணின் தோழிகள் மற்றும் உறவினர்களிடம் விசாரித்துவந்தனர்.
 
இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த நிஷூகுப்தா (20) என்ற வாலிபருடன் அவர் வெளியில் சுற்றிவந்ததாகத் தெரிகிறது. அதனால் நிஷூகுப்தாவை போலீஸார் தேடிவந்தனர்.
 
இந்நிலையில்  மாயமான அப்பெண் உடலில் பல காயங்களுடன் நேற்று முந்தினம் மீட்கப்பட்டார். உடலில் கடித்துவைத்த அடையாளங்களும் இருந்தன. பின்னர் அவரை மருத்துவர் சோதனை செய்யபிறகு அவருக்கு உடலில் போதை ஊசி போட்டு மயக்கமடையச் செய்து , தொடர்ந்து 10 நாட்களாக வன்புணர்வு செய்தது தெரியவந்தது.அப்பெண்ணை கடித்துவைத்தும் ,சித்ரவதை செய்துள்ளனர்.
 
இதுகுறித்து போலீஸார் அப்பெண்ணிடம் விசாரித்த போது, நிஷூகுப்தா தன்னை கற்பழித்ததாக அவர் கூறினார். மேலும் இளம்பெண்ணுக்கு நிஷூகுப்தா அறையில் ந்தித்த போது, தண்ணீர் கொடுத்ததும் மயங்கி விட்டார். அதன்பிறகு தான் நிஷூகுப்தா அவரை கற்பழித்துள்ளதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.