சனி, 14 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 2 செப்டம்பர் 2024 (11:08 IST)

சில்மிஷம் செய்த நபரை அடித்து வெளுத்து வீடியோ எடுத்த மாணவிகள்! - நெட்டிசன்கள் ரியாக்‌ஷன்!

Students

ராஜஸ்தானில் கடை ஒன்றில் ரீசார்ஜ் செய்ய வந்த பள்ளி மாணவிகளிடம் கடைக்காரர் மோசமாக நடந்துக்கொண்ட நிலையில், அந்த நபரை மாணவிகளே அடித்து வெளுத்த சம்பவம் நடந்துள்ளது.

 

 

நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் அதிகரித்து வரும் நிலையில் அதற்கு தகுந்த தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என பெண்ணிய அமைப்புகள் பலவும் போராடி வருகின்றன. இந்நிலையில்தான் ராஜஸ்தானில் அத்துமீறிய நபரை மாணவிகளே தைரியாமாக தட்டிக்கேட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

 

ராஜஸ்தான் மாநிலம் திட்வானா பகுதியில் குச்சுமான் நகரில் மொபைல் ரீசார்ஜ் கடையை ஒருவர் நடத்தி வந்துள்ளார். அங்கு பள்ளி மாணவிகள் சிலர் ரீசார்ஜ் செய்ய சென்றபோது, கடை உரிமையாளர் அந்த பெண்களிடம் அத்துமீறியதுடன் ‘ஐ லவ் யூ’ என்றும் கூறி தொந்தரவு செய்துள்ளார்.
 

 

இதனால் கோபமடைந்த மாணவிகள் அந்த நபரை நடுரோட்டிற்கு இழுத்து வந்து அடித்துள்ளனர். அதை வீடியோவாகவும் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட நிலையில், தங்களுக்கு நடந்த தவறை அந்த இடத்திலேயே தட்டிக்கேட்ட மாணவிகளின் செயல் வரவேற்கத்தக்கது என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 

Edit by Prasanth.K