திங்கள், 4 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 13 பிப்ரவரி 2024 (11:10 IST)

ராமாயணம், மகாபாரதம் கற்பனை என பாடம் நடத்திய ஆசிரியர் டிஸ்மிஸ்: பெரும் பரபரப்பு..!

ராமாயணம் மற்றும் மகாபாரதம் கற்பனை கதைகள் என்றும் ராமர் கற்பனை கேரக்டர் என்றும் பள்ளி மாணவர்களுக்கு பாடம் நடத்திய ஆசிரியர் டிஸ்மிஸ் செய்யப்பட்ட சம்பவம் கர்நாடக மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 
 
இந்தியாவின் இதிகாசங்கள் என்று கூறப்படும் ராமாயணம் மற்றும் மகாபாரதம் ஆகிய இரண்டுமே பழங்காலத்தில் நிகழ்ந்த நிகழ்வாகவே இந்து மக்கள் நம்பிக்கையாக உள்ளது. 
 
இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு பள்ளியில் மகாபாரதம் ராமாயணம் ஆகிய இரண்டுமே கற்பனை கதைகள் என்று ஆசிரியர் ஒருவர் பாடம் நடத்தியுள்ளார்.
 
 அதுமட்டுமின்றி ராமர் சீதை லட்சுமணன் என்ற அனைத்து கேரக்டர்களுமே கற்பனைகள் என்று கூறியதை அடுத்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த நிலையில் தற்போது அந்த ஆசிரியர் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
 
Edited by Mahendran