அமேசானில் பொருள் வாங்காதீர்கள்: டிக்டாக் வீடியோ வெளியிட்ட அமேசான் ஊழியர் டிஸ்மிஸ்..
அமேசான் நிறுவனத்தில் அதிக எடை கொண்ட பொருட்களை வாங்காதீர்கள் என டிக் டாக் வீடியோ பதிவு செய்த அமேசான் ஊழியர் ஒருவர் டிஸ்மிஸ் செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உலகின் முன்னணி இகாமர்ஸ் நிறுவனங்களில் ஒன்றான அமேசான் நிறுவனத்தில் வேலை செய்யும் ஒருவர் அமேசான் நிறுவனத்தில் அதிக எடை கொண்ட பொருட்களை வாங்காதீர்கள் என்றும் அவ்வாறு வாங்கினால் அந்த பொருள் பாதுகாப்பாக வந்தடையும் என்பதற்கு உத்திரவாதம் கிடையாது என்றும் டிக் டாக்கில் வீடியோ வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோ மிகப்பெரிய அளவில் வைரலான நிலையில் அமேசான் ஊழியர் ஒருவரே தங்களுடைய நிறுவனத்தில் பொருட்களை வாங்காதீர்கள் என சொன்னது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனை அடுத்து அவர் உடனடியாக டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.
மற்றவர்களை சிரிக்க வைக்க வேண்டும் என்பதற்காகவே அந்த வீடியோவை பதிவிட்டதாக அவர் கூறிய போதிலும் அவரது சமாதானத்தை அமேசான் நிறுவன நிர்வாகிகள் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனை அடுத்து ஏழு ஆண்டுகளாக அமேசான் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த அந்த ஊழியர் பணிநீக்கம் செய்யப்பட்டார். இதனை எதிர்த்து அவர் நீதிமன்றத்திற்கு செல்ல இருப்பதாகவும் கூறப்படுகிறது.
Edited by Mahendran