வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 24 ஜூலை 2020 (14:45 IST)

நீங்கள் ஏற்கனவே வாங்கிய 50 கோடி ரூபாய் கடன் எங்கே? டீக்கடைக் காரரை அதிர வைத்த வங்கி!

ஹர்யானா மாநிலத்தை சேர்ந்த ராஜ்குமார் என்ற தேநீர்க் கடை உரிமையாளர் வங்கியில் கடனுக்கு சென்ற போது அவர் பெயரில் ஏற்கனவே 50 கோடி ரூபாய் கடன் இருப்பதாக சொல்லி அதிரவைத்துள்ளனர்.

கொரோனா பேரிடர் காரணமாக இந்தியா முழுவதும் சிறு மற்றும் குறுதொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் பலரும் வியாபாரத்தைத் தொடர வங்கிகளில் கடன் வாங்க முயற்சி செய்து வருகின்றனர். அந்த வகையில் ஹரியானா மாநிலத்தில் உள்ள குருஷேத்ரா என்ற பகுதியில் தெருவில் டீக்கடை வைத்திருக்கும் ராஜ்குமார் அங்குள்ள வங்கிக்கு கடன் கேட்டு விண்னப்பித்துள்ளார். ஆனால் அவர் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அவர் கேள்வி எழுப்பிய போது ”ஏற்கனவே வாங்கியுள்ள 50 கோடி நிலுவையில் உள்ள நிலையில், இந்த கடனை எப்படி கட்டுவீர்கள்...?” என்று கேட்டுள்ளனர். இதைக்கேட்ட அவர் அதிர்ச்சியடைந்துள்ளார். மேலும் ’நானே தெருவில் டீக்கடை வைத்திருக்கிறேன். நான் எப்படி 50 கோடி ரூபாய் கடன் வாங்கமுடியும்’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த சம்பவமானது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.