புதன், 30 அக்டோபர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 11 அக்டோபர் 2024 (14:32 IST)

ரத்தன் டாடா மறைவால் டிசிஎஸ் பங்குகள் சரிவு, முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!

tata
டாடா நிறுவனத்திற்கு சொந்தமான டிசிஎஸ் பங்குகள் இன்று இரண்டு சதவீதம் சரிவு சந்தித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
பிரபல இந்திய தொழிலதிபர் ரத்தன் ரத்தன் டாடா நேற்று முன்தினம் காலமான நிலையில், டாடா நிறுவனத்திற்கு சொந்தமான பங்குகள் எதுவும் சரிவை சந்திக்காத நிலையில், டிசிஎஸ் நிறுவனத்தின் பங்குகள் மட்டும் இரண்டு சதவீதம் சரிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
போதுமான முதலீட்டாளர்களை ஈர்க்க தவறவிட்டதால் தான் இந்த சரிவு எனவும், டாடாவின் மறைவுக்கும் இந்த அறிவிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனவும் கூறப்படுகிறது.
 
இந்த நிலையில், இன்று மும்பை பங்கு சந்தை சென்செக்ஸ் 270 புள்ளிகள் சரிந்து, 81,341 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல், தேசிய பங்கு சந்தை வெட்டி 50 புள்ளிகள் சரிந்து, 24,946 என்ற புள்ளிகளின் வர்த்தகம் ஆகி வருகிறது.
 
Edited by Siva