வியாழன், 16 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 10 அக்டோபர் 2024 (16:17 IST)

போலி செய்திகளை யாரும் பரப்ப வேண்டாம்.. ரத்தன் டாடாவின் கடைசி சமூக வலைத்தள பதிவு..!

எனது உடல்நிலை குறித்து யாரும் போலியான செய்திகளை வெளியிட வேண்டாம் என்று ரத்தன் தாத்தா வெளியிட்ட சமூக வலைத்தள பதிவுதான் அவரது கடைசி பதிவு என தெரிய வந்துள்ளது.

வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று இரவு 11:30 மணி ரத்தன் டாடா காலமான நிலையில், அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, ஜனாதிபதி திரௌபதி முர்மு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்பட்ட பலரும் தங்களது சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னால் ரத்தன் டாடா உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக செய்திகள் வெளியாகிய போது, அதற்கு மறுப்பு தெரிவித்து தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டு இருந்தார். அந்த அறிக்கை தான் அவரது கடைசி எக்ஸ் பதிவு என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த பதிவில், “எனது உடல்நிலை குறித்து வெளியாகிக் கொண்டிருக்கும் வதந்திகளை நம்ப வேண்டாம். வயது மூப்பு மற்றும் அதனால் ஏற்படும் தொந்தரவுகளுக்கான பரிசோதனை மட்டுமே மேற்பட்ட மேற்கொண்டு வருகிறேன். என்னைப் பற்றி யாரும் கவலைப்பட வேண்டாம், எனது உடல்நிலை குறித்து போலியான செய்திகளை பரப்ப வேண்டாம்” என குறிப்பிட்டிருந்தார். இந்த பதிவுதான் ரத்தன் டாடாவின் கடைசி பதிவு என்ற நிலையில், இந்த பதிவை பலரும் தற்போது வைரல் ஆக்கி வருகின்றனர்.


Edited by Siva