1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 11 மே 2021 (07:39 IST)

வெளிநாடுகளில் இருந்து வரும் நிவாரணப் பொருட்களுக்கு வரி விலக்கு: மத்திய அரசு

வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் நிவாரண பொருள்களுக்கு வரி விலக்கு என மத்திய அரசு அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு கொரோனா நோயாளிகளுக்காக பல நிவாரண பொருட்கள் வந்துகொண்டிருக்கின்றன. ஆக்சிஜன் சிலிண்டர் மருத்துவ உபகரணங்கள் உள்பட பல பொருள்கள் நிவாரண பொருட்களாக வந்து கொண்டிருப்பதால் அந்த பொருட்களுக்கு வரி விலக்கு அளிக்கும் வகையில் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது
 
அதே நேரத்தில் வெளிநாட்டில் இருந்து தமிழகத்திற்கு நன்கொடையாக பெறப்படும் நிவாரண பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி விலக்கு என அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து நிவாரண பொருட்களை கண்காணிக்க அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
 
வெளிநாடுகளில் இருந்து தமிழகத்திற்கு நன்கொடையாக பெறப்படும் நிவாரண பொருட்கள் ஜிஎஸ்டி வரி விலக்கு என்ற மத்திய அரசின் உத்தரவை கண்காணிக்க ஐஏஎஸ் அதிகாரிகளை தமிழக அரசு நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களுக்கு சிறப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளதை அடுத்து அந்த அதிகாரிகள் இந்த நிவாரண பொருட்களை கண்காணிப்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது