செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 9 ஜூன் 2021 (07:53 IST)

கோவின் இணையதளத்தில் தமிழ்: சாதித்து காட்டிய தமிழர்கள்

கோவின் இணையதளத்தில் தமிழ்: சாதித்து காட்டிய தமிழர்கள்
கொரனோ தடுப்பூசிக்கு பதிவு செய்யும் கோவின் இணையதளத்தில் தமிழ் இணைக்கப்பட்டுள்ளது இந்தி மராத்தி குஜராத்தி உள்ளிட்ட 10 மொழிகளுக்கு மேல் சமீபத்தில் கோவின் இணையதளத்தில் இணைக்கப்பட்டு இருந்தது 
 
ஆனால் மாநில மொழிகள் சேர்க்கப்பட்ட நிலையில் தமிழ்மொழி மட்டும் சேர்க்கப்படாமல் இருந்ததற்கு கடுமையான கண்டனங்கள் எழுந்தன. இதனை அடுத்து மத்திய அரசு ஒரு சில நாட்களில் தமிழ் மொழியும் சேர்க்கப்படும் என உறுதி அளித்திருந்தது
 
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி கோவின் இணையதளத்தில் தமிழ்மொழி இணைக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் 
 
முதலில் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே இருந்த கோவின் இணையதளத்தில் அதன் பிறகு பத்து மொழிகள் சேர்க்கப்பட்ட நிலையில் தற்போது தமிழ் மொழியும் அதில் இணைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது