திங்கள், 13 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : புதன், 25 ஜனவரி 2017 (16:27 IST)

சந்தேகத்தால் மீண்டும் அளவிடப்படும் எவரெஸ்ட் சிகரம்!

ஆய்வாளர்களின் சந்தேகத்தினை அடுத்து எவரெஸ்ட் மலையின் உயரத்தினை இந்திய சர்வே அமைப்பு மீண்டும் அளவீடு செய்கிறது.


 

ஹைதராபாத் நகரில் நடந்த ‘ஜியோ ஸ்பேசியல்’ உலக அமைப்புக்கான கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட பின் பேசிய இந்திய சர்வே அமைப்பின் தலைவர் சுவர்ண சுப்பராவ் கூறும்பொழுது, “எவரெஸ்ட் மலைக்கு நாங்கள் குழு ஒன்றினை அனுப்புகிறோம். கடந்த 1855ம் ஆண்டில் எவரெஸ்டின் உயரம் அறிவிக்கப்பட்டது என நினைக்கிறேன்.

பலரும் அதனை அளவீடு செய்துள்ளனர். ஆனால் இந்திய சர்வே அமைப்பு அளித்துள்ள உயரமே இன்றளவும் சரியான உயரம் என எடுத்துக் கொள்ளப்படுகிறது. அது 29 ஆயிரத்து 28 அடியாக உள்ளது. இந்நிலையில், நாங்கள் மீண்டும் அளவீடு செய்கிறோம்” என்றார்.

மேலும் அவர் கூறுகையில், ”நேபாளத்தில் பெரிய அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு 2 வருடங்கள் கடந்துவிட்டன. அதன் பின்னர், அறிவியல் ஆய்வாளர்களுக்கு மலை சுருங்கி வருகிறது என சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஆய்வு செய்வதற்கு அது ஒரு காரணம்.

அறிவியல் ஆய்வுகள், அடுக்குகளின் இயக்கம் ஆகியவற்றை அறிய உதவிடும் என்பது 2வது காரணம்.இந்த குழுவிற்கான அனைத்து தேவையான ஒப்புதல்களும் கிடைத்து விட்டன. இரு மாதங்களில் (ஆய்வு குழு) அனுப்பிட நாங்கள் திட்டமிட்டுள்ளோம்” என்றார்.