செவ்வாய், 3 அக்டோபர் 2023
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 19 செப்டம்பர் 2023 (07:29 IST)

ஒரே நாடு ஒரே மதம்.. சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுவால் பரபரப்பு..!

நாடு முழுவதும் ஒரே மதத்தை பின்பற்ற உத்தரவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  
 
சுப்ரீம் கோர்ட்டில் சஞ்சய் கிஷன் கவுல் மற்றும் சுதாதன்சு துலியா ஆகிய இருவரும்  நாடு முழுவதும் ஒரே மதத்தை பின்பற்ற உத்தரவிட வேண்டும் என்று மனு தாக்கல் செய்தனர் 
 
இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்த போது  நாடு முழுவதும் ஒரே மதம் என்றால் மற்ற மதங்களை பின்பற்றுபவரை உங்களால் பின்பற்றாமல் தடுக்க முடியுமா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினார். 
 
அதற்கு இந்த மனுவை தாக்கல் செய்தவர்களில் ஒருவர் ’அரசியல் சாசனத்தின் 32 வது பிரிவின்படி இந்திய மக்கள் சார்பில் ஒரே அரசியல் சாசன மதம் கூறி இந்த பொதுநல பணிகளை தாக்கல் செய்திருப்பதாக கூறினார். 
 
ஆனால் அதனை ஏற்று கொள்ள மறுத்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் இந்த மனுவை தள்ளுபடி செய்தனர். இந்த மனுவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Siva