1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Updated : செவ்வாய், 2 ஏப்ரல் 2024 (14:57 IST)

சஞ்சய் சிங்குக்கு ஜாமின் -உச்சநீதிமன்றம் அதிரடி

sanjai singh
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட, ஆம் ஆத்மி எம்பி., சஞ்சய் சிங்குக்கு ஜாமின் வழங்கியது உச்ச நீதிமன்றம்.
 
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஏற்கனவே டெல்லி துணைமுதல்வர் மணீஸ் சிசோடியா அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
 
இதையடுத்து, தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகரராவின் மகள் கவிதாவும் இவ்வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகிறார்.
 
இவ்வழக்கில் பல முறை சம்மன் அனுப்பியும் நேரில் ஆஜராகாத முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சமீபத்தில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
 
இவ்வழக்கின் விசாரணை  நடந்து வரும்  நிலையில் மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு 6 மாதங்களாக சிறையில் உள்ள ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங்குக்கு ஜாமின் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
இவ்வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. 
அதில், உண்மை என்னவென்றால் இந்த வழக்கில் பணம் எதுவும் மீட்கப்படவில்லை. ஆனால் நீங்கள் சஞ்சய் சிங்-ஐ 6 மாதங்கள் நீதிமன்றக் காவலில் வைத்திருக்கிறீர்கள். அவருக்கு காவல் தேவையா? இல்லையா? என்பது குறித்து எங்களுக்குத் தெரிய வேண்டும் என்று தெரிவித்தனர்.
 
இதையடுத்து, சஞ்சய் சிங்குக்கு பிணை வழங்க எந்த ஆட்சேபனையும் இல்லை என அமலாக்கத்துறை கூறியதை அடுத்து, ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.