செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : சனி, 19 மே 2018 (11:31 IST)

போபையாவை நீக்க முடியாது - உச்சநீதிமன்றம்

கர்நாடக சட்டசபையின் தற்காலிக சபாநாயகர் கே.ஜி.போப்பையாவை நீக்க உச்சநீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை எனக்கூறி உச்சநீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்துள்ளது.
கர்நாடக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் நேற்று தெரிவித்திருந்தது.
 
இதனையடுத்து கர்நாடக சட்டசபை தற்காலிக சபாநாயகராக பாஜகவைச் சேர்ந்த கே.ஜி. போப்பையா நியமிக்கப்பட்டார். இவர் ஏற்கனவே எடியூரப்பாவிற்கு ஆதரவாக செயல்பட்டார் என உச்சநீதிமன்றத்தால் கண்டிக்கப்பட்டவர்.
 
இந்நிலையில் அவரையே தற்காலிக சபாநாயகராக ஆளுநர் நியமித்ததற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்ததோடு, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
 
இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், தற்காலிக சபாநாயகரை நீக்க உச்சநீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை, என்றும் கே.ஜி.போப்பையாவே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தலாம் எனக்கூறி காங்கிரஸ் தொடர்ந்த இவ்வழக்கை தள்ளுபடி செய்துள்ளது.