ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Modified: செவ்வாய், 31 ஜனவரி 2017 (17:03 IST)

தமிழக அரசின் அவசர சட்டத்திற்கு தடை விதிக்க முடியாது - உச்ச நீதிமன்றம் அதிரடி

ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழக அரசு கொண்டு வந்த அவசர சட்டத்திற்கு தடை விதிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

 


 
ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழக அரசு கொண்டுவந்த அவசர சட்ட மசோதாவுக்கு எதிராக, இந்திய விலங்குகள் நல வாரியம், பீட்டா, கியூப்பா போன்ற அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன. அதன் விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள்
 
தீபக் மிஸ்ரா
மற்றும் அமிதவாராய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

 
விலங்குகள் வதைத் தடுப்புச் சட்டத்தில் திருத்தம் செய்து, ஜல்லிக்கட்டிற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியிருப்பதும், 2016ம் ஆண்டு அறிவிக்கு தொடர்பான தீர்ப்பு அறிவிக்க உள்ள நிலையில், மத்திய அரசு தனது அறிவிக்கையை திரும்பப் பெறுவதாக மத்திய அரசு கூறியிருப்பதும், அரசியலைமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என வழக்கில் குறிப்பிடப்பட்டிருந்தது. எனவே, வழக்கின் தீர்ப்பு என்னவாகுமோ என்ற அச்சமும், எதிர்ப்பார்ப்பு தமிழக மக்களிடையே நிலவி வந்தது.
 
இந்நிலையில், இன்றைய விசாரணையில்,  2016ம் அண்டு மத்திய அரசு சமர்பித்த அறிவிக்கையை திரும்ப பெறும் முடிவை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. அதேபோல், ஜல்லிக்கட்டிற்கு எதிராக தொடரப்பட்ட அனைத்து வழக்குகளையும் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டது.
 
அப்போது, 2016ம் ஆண்டு அளிக்கப்பட்ட உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு எதிராக ஜல்லிக்கட்டு நடந்தது ஏன்?.. இதுவரை ஜல்லிக்கட்டில் எத்தனை பேர் உயிரிழந்தனர்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.


 

 
அதன்பின் தீர்ப்பளித்த நீதிபதிகள்,  அவசர சட்டம் கொண்டு வர மாநில அரசிற்கு உரிமை இருப்பதால், தமிழக அரசின் சட்டத்திற்கு அனுமதிக்க முடியாது எனவும், விலங்குகள் நல ஆணையம், பீட்டா, கியூப்பா போன்ற அமைப்புகள் 2 வாரத்திற்குள் ரிட் மனுவை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.  
 
மேலும்,  ஜல்லிகட்டு சட்டத்தை எதிர்க்கும் மனுக்கள் மீது மத்திய, மாநில அரசு, 6 வாரத்திற்குள் பதில் அளிக்க வேண்டும் எனவும் அவர்கள் தீர்ப்பளித்தனர்.
 
ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழக அரசு கொண்டு வந்த அவசர சட்டத்திற்கு தடை விதிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது தமிழக மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.