புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 15 மார்ச் 2019 (12:05 IST)

3 தொகுதி இடைத்தேர்தல்: திமுகவுக்கு உச்சநீதிமன்றம் காட்டமான கேள்வி!

வரும் ஏப்ரல் 18ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தலுடன் காலியாக உள்ள 21 சட்டமன்ற தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் நடத்தப்பட்டும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. மீதியுள்ள அரவக்குறிச்சி உள்ளிட்ட மூன்று தொகுதிகளில் நீதிமன்ற வழக்கு இருப்பதால் இந்த மூன்று தொகுதிகளுக்கும் பின்னர் தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது 
 
இந்த நிலையில் 18 தொகுதிகளுடன் மூன்று தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டுமென திமுக தரப்பில் இருந்து உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
 
இந்த விசாரணையில் 18 தொகுதிகளுடன் 3 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தக்கோரிய திமுக தரப்புக்கு உச்சநீதிமன்றம் கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளது. அதாவது அரவக்குறிச்சி உள்ளிட்ட 3 தொகுதிகளிலும் இடைத்தேர்தலை பின்னர் நடத்துவதில் திமுகவுக்கு என்ன பிரச்னை? என்று கேள்வி எழுப்பியதோடு இடைத்தேர்தலை நடத்த உத்தரவிடும்படி எங்களை நிர்பந்திக்காதீர்கள் என்றும் அறிவுறுத்தியது. அதன்பின் திமுகவின் இந்த மனுவுக்கு மார்ச் 25க்குள் தேர்தல் ஆணையம் பதிலளிக்க என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்ப்பித்தது.